அம்பலாங்கொடை நகர சபை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் லெதர் பந்து கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த வீராங்கனை ஒருவர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலபிட்டிய ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அம்பலாங்கொடை பிரஜாபதி கோதமி மகளிர் கல்லூரியின் எம்.
உப்புலி என்ற வீராங்கனை ஆவார்.குறித்த கிரிக்கெட் போட்டி அம்பலாங்கொடை பிரஜாபதி கோதமி மகளிர் கல்லூரியும் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியும் இடையே நடைபெற்றது. இதில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் வீராங்கனை ஒருவர் அடித்த பந்தை பிரஜாபதி கோதமி மகளிர் கல்லூரியின் வீராங்கனை கேட்ச் பிடிக்க முயன்றபோது, பந்து அவரது கைகளுக்கு இடையில் நழுவி மூக்கில் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்து தாக்கியதில் மூக்கில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த அந்த வீராங்கனையை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பாடசாலை அதிகாரிகள் 1990 சுகாதார சேவை ஆம்புலன்ஸை அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.