மருத்துவ அத்தியட்சகர் இடமாற்றத்திற்குப் பிறகு கிழக்கு மருத்துவ வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

after-the-change-of-medical-superintendent-the-strike-of-doctors-in-nengehara-is-over

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த வைத்திய பணிப்புறக்கணிப்பு இன்று (22) பிற்பகல் 2.00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.




அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிர்வாக மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்கி புதிய பணிப்பாளரை நியமிக்குமாறு வைத்திய சங்கம் கோரியிருந்தது.

இதன்படி, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வைத்திய அத்தியட்சகரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டதையடுத்து, பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர வைத்திய சங்கம் இணங்கியுள்ளது.




கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post