ஆக்ரா ஓயாவில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது

womans-body-found-in-agra-oya

அகரபத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலிருந்து பாயும் ஆக்ரா ஆற்றில் இன்று (03) ஒரு பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 85 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.




குறித்த பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலர் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த இந்த சடலத்தைக் கண்டு அகரபத்தனை பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கிடைத்த தகவலின் பேரில் செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டெடுத்ததுடன், ஆரம்ப நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அகரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

news-2026-01-03-145945

news-2026-01-03-145945

news-2026-01-03-145945

Post a Comment

Previous Post Next Post