தெஹிவளை, வெள்ளவத்தை, கொலன்னாவ உள்ளிட்ட சில பகுதிகளில் அவசர நீர் விநியோகத் தடை

emergency-water-supply-disruption-in-several-areas-including-dehiwala-wellawatte-and-kolonnawa

அம்பத்தலையிலிருந்து தெஹிவளை வரை நீர் வழங்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக, இன்று (3) கொழும்பை அண்மித்த பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.




நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் பிரதேசங்களில் மொரட்டுவை, ராவதவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகியவை அடங்கும்.

மேலும், பத்தரமுல்லை பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.




எவ்வாறாயினும், இந்த திடீர் உடைப்பு இன்று (3) நள்ளிரவுக்கு முன்னர் திருத்தப்பட்டு, நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post