அரசாங்க நிறுவனங்களில் பல உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை தலைவர்கள் உட்பட பல முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்கான முன்மொழியப்பட்ட பெயர்கள் மற்றும் நபர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான பணிகள் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.