கொழும்பு மாநகர சபை தனது அதிகார எல்லைக்குள் சடலங்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் முழுமையாக ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.
அதன்படி, தகனம் செய்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட பத்தாயிரம் (10,000) ரூபாய் கட்டணமும், இஸ்லாமிய சடலங்களை புதைப்பதற்காக அறவிடப்பட்ட ஏழாயிரத்து ஐநூறு (7,500) ரூபாய் கட்டணமும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக முன்வைக்கப்பட்டதுடன், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபை கூட்டத்தில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பால்டசார் அம்மையாரால் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துடன், கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் இனி எந்தக் கட்டணமும் இன்றி சடலங்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.