அனர்த்த கடமை கொடுப்பனவுகள் 100% இனால் அதிகரிக்கப்படும்

increases-disaster-duty-allowances-by-100

விரிவான அனர்த்த சூழ்நிலைகளிலும், அனர்த்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நூறு சதவீதத்தால் (100%) அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.




இந்த புதிய கொடுப்பனவு அதிகரிப்பு, 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 15 ஆம் திகதி வரை நிலவிய விரிவான அனர்த்த நிலைமையின் போது கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் வகையில் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இனிவரும் காலங்களில் ஏற்படும் இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த புதிய கொடுப்பனவு வழங்கப்படும். அதன்படி, உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு தேவையான சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

அனர்த்த காலங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இதற்கு முன்னர் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய செலுத்தப்பட்டது. இருப்பினும், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அந்தக் கொடுப்பனவை திருத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் கண்டறிந்தது. அதன்படி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம் ஆகிய நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post