கொழும்பு பம்பலப்பிட்டி விசாகா மகளிர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த பிக் மச் மாணவர்கள் குழுவொன்று உள்ளே குழப்பம் ஏற்படுத்த முயற்சித்த பின்னர் பாடசாலை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குழு வஜிரா வீதியூடாக வந்து பாடசாலையின் வாயில் மீது ஏறி வாயிலைத் திறந்து பின்னர் உள்ளே நுழைந்துள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் முகமூடி அணிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாடசாலையின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இக்குழுவை வெளியேற்ற நடவடிக்கை எடுத்த பின்னர், குழு கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.