முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே உறுப்பினர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அந்த சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கருணாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.