லீட்ரோ எரிவாயு விலை உயர்வு

litro-gas-price-up

லிட்ரோ வீட்டு எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.




அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும்.

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,602 ரூபா என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.

இந்த விலை திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது 

"உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்ததன் காரணமாக மேற்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச விலை திருத்தத்தை பரிசீலித்த பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 2024க்குப் பிறகு) லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் வீட்டுப் பாவனைக்கான 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 300.00 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கின்றோம்."

litro-gas-price-up

Post a Comment

Previous Post Next Post