செவிலியரின் காதல் வலையில் சிக்கிய சிறப்பு மருத்துவர் 65 லட்சம் கப்பம் செலுத்திவிட்டார்

the-specialist-doctor-caught-by-the-love-bait-of-the-nurse-paid-a-ransom-of-65-lakhs

கண்டி பிரதான மருத்துவ மையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விசேட வைத்தியரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கப்பமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒரு தாதியும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர், குறித்த மருத்துவ மையத்திலேயே பணிபுரிந்த முன்னாள் தாதி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.




பொலிஸ் விசாரணைகளின்படி தெரியவந்துள்ளதாவது, 24 வயதுடைய இந்த தாதிக்கும் பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் இடையில் நீண்டகாலமாக மிகவும் நெருக்கமான உறவு இருந்துள்ளது. பின்னர் அவர் தனது வேலையை விட்டு விலகி திருமணம் செய்துகொண்ட பின்னர் மெதமகாநுவர பிரதேசத்தில் குடியேறியுள்ளார். அதன் பின்னர் தனது கணவரையும் இணைத்துக்கொண்டு இந்த கப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

குறித்த வைத்தியருடன் கழித்த நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறி, சந்தேகநபரும் அவரது கணவரும் வைத்தியரை அச்சுறுத்தி பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பணத்தைப் பெற்றுள்ளனர். தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளான வைத்தியர், இது தொடர்பாக தெல்தெனிய பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார். அந்த முறைப்பாட்டின்படி செயற்பட்ட அந்த பணியகத்தின் அதிகாரிகள், சந்தேகநபர்களான தம்பதியினரை இவ்வாறு கைது செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post