ஞாயிறு பாடசாலைக்குச் செல்லும் போது விபத்தில் சிக்கிய மாணவன் ஒரு வாரத்திற்குப் பிறகு உயிரிழந்தான்.

the-student-who-had-an-accident-while-going-to-sunday-school-died-a-week-later

ஊவா குடாவோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிபுரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் விபத்து நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.




இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் சிரிபுரகம பிரதேசத்தைச் சேர்ந்த, இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி அதன் பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்த மாணவன் ஆவார். கடந்த 03ஆம் திகதி இந்த மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் தஹம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கரமான விபத்தை சந்தித்துள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில், இந்த மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அவரது உறவுச் சகோதரி ஒருவரும் பயணித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்று வந்த அந்தப் பாடசாலை மாணவி விபத்து நடந்த அன்றே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் விபத்தில் பலத்த காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




இந்த மரண விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாவோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த குமாரசிங்க மேற்கொண்டு வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post