மஹிந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு

mahinda-to-bribery-commission

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.




ஏர்பஸ் கொள்வனவுக்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆஜரானார்.

இலஞ்சப் பணத்தில் அறுபது மில்லியன் ரூபா மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக, அது தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வெளியிட்ட தகவலின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.




அத்துடன், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவும் இலஞ்ச ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். ‍ இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் வில்லி கமகே நேற்று (11) முற்பகல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டுச் சென்றிருந்தார்.

gossiplanka image

Post a Comment

Previous Post Next Post