2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள், எதிர்பார்க்கப்பட்ட திகதியை விட சற்று தாமதமாக வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த பெறுபேறுகளை ஜூன் மாதம் 15 ஆம் திகதி வெளியிட ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சில நிர்வாகக் காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், பெறுபேற்று ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு வார காலத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 451,463 விண்ணப்பதாரர்கள் தோற்றியுள்ளனர்.