தேசிய வைத்தியசாலைக்கு புதிய பிரதி பணிப்பாளர்

a-new-deputy-director-for-the-national-hospital

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய பிரதி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் எம்.கே. சம்பத் இந்திக்க குமார நேற்று (15) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த 11ஆம் திகதி பிரதி பணிப்பாளர் நாயகம் பதவிக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய அதிகாரிகளில் இவரும் மேலும் எட்டு அதிகாரிகளும் அடங்குவர்.




நீண்ட காலத்திற்குப் பிறகு, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் பதவி உட்பட சுகாதாரத் துறையில் பல முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையின் புதிய பிரதி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் எம்.கே. சம்பத் இந்திக்க குமார, நாட்டின் மருத்துவ நிர்வாகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற, சுகாதாரத் துறையின் உயர்மட்ட சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாவார். அவர் இதற்கு முன்னர் பதுளை மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகளிலும், பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலைகளிலும் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். அத்துடன், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி மற்றும் மகரகம அப்பேக்‌ஷா வைத்தியசாலை போன்ற நாட்டின் பல முன்னணி பிரதான வைத்தியசாலைகளில் பணிப்பாளர் பதவிகளை வகித்து சிறப்பான நிர்வாக அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post