රත්මලානේදී ගුවන් යානයක සරුංගල් පැටලීමෙන් පසු එම කලාපවල සරුංගල් නොයවන ලෙස ගුවන් හමුදාවෙන් ඉල්ලීමක්

a-request-from-the-air-force-not-to-fly-kites-in-those-areas-after-an-airplane-entangled-with-kites-in-ratmalana

விமான நிலையங்கள் மற்றும் விமானப் பாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூலை 15 அன்று ரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Y-12 ரக பயிற்சி விமானம் ஒன்று பட்டம் நூல்களில் சிக்கியதால் அவசரமாக தரையிறங்க நேரிட்டதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனைகளில், அதன் இடதுபுற சக்கரம், இடது இயந்திரப் பகுதி மற்றும் மேலும் பல முக்கிய பாகங்களில் அதிகளவிலான பட்டம் நூல்கள் சிக்கியிருந்தமை தெரியவந்துள்ளது.




இவ்வாறான செயற்பாடுகள் விமானங்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டும் விமானப்படை, வானில் மிதக்கும் பட்டம் நூல்கள் அல்லது வேறு குப்பைகள் விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குள் நுழையக்கூடும் எனக் கூறுகிறது. இதனால் விமானங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டு அவற்றின் கட்டுப்பாடு இழக்கப்படலாம் என்பதுடன், இது விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கும் கூட கடுமையான ஆபத்தை விளைவிக்கும்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளும்போது, கட்டுநாயக்க, ரத்மலானை, மத்தள, ஹிங்குரக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கலை, வவுனியா மற்றும் வீரவில ஆகிய விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடும் போக்கு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்த விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விமான நிலையங்கள் மற்றும் விமானப் பாதைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களும் இந்த வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பட்டம் விடுவதைத் முழுமையாகத் தவிர்க்குமாறு விமானப்படை கேட்டுக்கொள்கிறது.

a-request-from-the-air-force-not-to-fly-kites-in-those-areas-after-an-airplane-entangled-with-kites-in-ratmalana

a-request-from-the-air-force-not-to-fly-kites-in-those-areas-after-an-airplane-entangled-with-kites-in-ratmalana

Post a Comment

Previous Post Next Post