மகா மோதர புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

a-gazette-notification-to-establish-a-new-prison-in-mahmodara

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவினால் வெளியிடப்பட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் காலி, மஹமோதர பிரதேசத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி, “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்த சிறைச்சாலை நடத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

a-gazette-notification-to-establish-a-new-prison-in-mahmodara

Post a Comment

Previous Post Next Post