கோதுமை மாவு விலை உயர்வுக்கு ஏற்ப, இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவு நிறுவனங்கள் நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பாண் மாவின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தது என விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பாண் விலையை அதிகரிப்பதுடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் பொருத்தமான வகையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் செயற்பட சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.