14 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் அத்துமீறல் செய்ததாக தந்தையின் நண்பர் கைது

fathers-friend-arrested-for-sexually-assaulting-14-year-old-boy

பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய ஆண் பிள்ளைக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரவக்க நீதவான் அநுருத்த சமரவீர உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த லியனாராச்சி கங்கானம்கே இந்துனில் பிரியதர்ஷன என்பவராவார்.




14 வயது ஒரு மாதமான இந்த சிறுவன் தனது வீட்டின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு பட்டம் விடச் சென்றுள்ளான். அங்கு சந்தேகநபரான தந்தையின் நண்பரால் குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊருபொக்க பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் தேவிகா அம்மையார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளார். பின்னர் ஊருபொக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.பி.டபிள்யூ. பல்லியகுருவே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் தனுஷ்க (78230) கடந்த 24 ஆம் திகதி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post