நீண்ட விடுமுறை காலத்தில் தேசிய மின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்குடன், கூரையிலுள்ள 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட அனைத்து சூரிய மின் தகடு அமைப்புகளையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். குறிப்பிட்ட நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறைவதால், தேசிய மின்சாரத் தேவை குறைவது ஒரு பொதுவான நிலை. அத்தகைய சூழ்நிலையில், தேசிய மின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கட்டமைப்பு இயக்குநரும் குறிப்பிட்ட காலத்தில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.