டெங்கு தடுப்பூசி அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே, ஒரு டோஸ் ரூ. 30,000

dengue-vaccine-approved-only-for-private-hospitals-one-dose-rs-30000

டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறுவர்களுக்கு இலக்காகக் கொடுக்கப்படும் 'க்யூ டெங்கா – டாக் 003' (Qdenga – Tak 003) தடுப்பூசியைப் பயன்படுத்த தனியார் துறைக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரச மருத்துவமனைகளுக்கு அந்த அனுமதி




கிடைக்காததால், அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

'க்யூ டெங்கா – டாக் 003' தடுப்பூசியை, இந்நாட்டில் பயன்படுத்துவதற்கு, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை முழுமையான அனுமதி வழங்காத நிலையில், தனியார் துறைக்கு மட்டும் அதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இந்நாட்டின் இலவச சுகாதார சேவைக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் குற்றம் சாட்டுகிறார்.




டெங்கு நோய்த்தொற்றைத் தடுக்க, இந்த தடுப்பூசி குப்பிகளில் இரண்டு டோஸ்கள், மூன்று மாத இடைவெளியில் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு தடுப்பூசி குப்பியின் தற்போதைய சர்வதேச சந்தை விலை சுமார் 80 அமெரிக்க டாலர்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதன்படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெறுவதற்கு இந்நாட்டு நோயாளிகள் சுமார் 60,000 ரூபாய்க்கு அருகில் செலவழிக்க நேரிடும். TAK – 003 என்பது, தற்போது உலக சுகாதார அமைப்பினால் (WHO) டெங்கு நோய் பரவும் தீவிரம் அதிகமுள்ள பகுதிகளில் 6-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடுப்பூசி என்றும், இது மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும் 2 டோஸ்கள், தோலின் கொழுப்புப் படலத்திற்குள் செலுத்தப்படுவதன் மூலம் உடலில் மெதுவாக உறிஞ்சப்படும் ஒன்று என்றும் விசேட வைத்தியர் சாமல் சஞ்சீவ மேலும் தெரிவிக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post