ஆஸ்திரேலிய முன்னணி முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக தயாராக உள்ளனர்

many-leading-australian-investors-are-ready-for-new-investment-opportunities-in-sri-lanka

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விசேட முதலீட்டு கலந்துரையாடலின் போது, இலங்கையின் பல முக்கிய துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) மேற்கொள்ள அந்நாட்டின் முன்னணி தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் குழு முன்வந்துள்ளது. உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் தேசிய வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடல் தொடர் விக்டோரியா மாநிலத்தின் கிளைட் நோர்த் (Clyde North) இல் வெற்றிகரமாக நடைபெற்றது.




கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடல்களில் ECOGEN நிறுவனம் ஊடாக நிலையான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதுடன், AusLoop Global Solutions நிறுவனம் மூலம் ஆடைத் துறை தொடர்பான நிலையான மறுசுழற்சி செயல்முறைகளை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதன் நோக்குடன், FRMAFIRST நிறுவனம் ஊடாக 2,000 பசுக்களின் கொள்ளளவு கொண்ட பாரிய வணிக பால் பண்ணையை நிறுவுவதற்கும், காலநிலை மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய கால்நடை இனப்பெருக்க திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு (IDB) சொந்தமான ஏகல கைத்தொழில் பேட்டையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி முப்பரிமாண அச்சிடல் (3D Printing) தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிர்மாணிக்க முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்தனர்.




மேலும், ஒருங்கிணைந்த நீரியல் வளர்ப்புத் திட்டங்கள், மாரவில பிரதேசத்தை மையமாகக் கொண்ட சூழல் நட்பு சுற்றுலா ஹோட்டல் வளாகங்கள், OSCS Holdings ஊடாக மேற்கொள்ளப்படும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அத்துடன் FLEXIMAKE நிறுவனம் தொடர்பான பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் வணிகச் சூழலில் ஏற்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அரச ஆதரவைப் பாராட்டிய முதலீட்டாளர்கள், இந்த அனைத்துத் திட்டங்களையும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முழுமையான இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

many-leading-australian-investors-are-ready-for-new-investment-opportunities-in-sri-lanka

many-leading-australian-investors-are-ready-for-new-investment-opportunities-in-sri-lanka

many-leading-australian-investors-are-ready-for-new-investment-opportunities-in-sri-lanka

Post a Comment

Previous Post Next Post