இலங்கையின் புதிய அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

eric-meyer-is-the-new-us-ambassador-to-sri-lanka

இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) அவர்கள் வொஷிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.




கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் லண்டா தலைமையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகம் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.




தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவமுள்ள ஒரு சிரேஷ்ட வெளிநாட்டு சேவை அதிகாரியான திரு. மேயர், தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகப் பணியாற்றினார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையில் பணியாற்ற கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அதன் ஊழியர்களும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வொஷிங்டனுக்கும் கொழும்புக்கும் இடையிலான பொதுவான நலன்களையும் முன்னுரிமைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் திரு. மேயரின் பதவிக்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post