மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் மற்றும் கொழும்பு இடையேயான ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பிராந்தியத்தில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகம் முன்னதாக தீர்மானித்திருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை மீண்டும் மதிப்பாய்வு செய்த பின்னர், இன்று பிற்பகல் முதல் வழமை போன்று குறித்த விமான சேவைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.