கொள்ளுப்பிட்டியில் பெண்ணை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

shooting-targeting-a-woman-in-kollupitiya

கொழும்பு 3, 6வது ஒழுங்கை பிரதேசத்தில் அமைந்துள்ள பல மாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இன்று (04) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் காயமடைந்துள்ளார். குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்த ஒருவர், திறந்தவெளி வளாகத்தில் நின்றிருந்த இரண்டு பெண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பெண் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

shooting-targeting-a-woman-in-kollupitiya

shooting-targeting-a-woman-in-kollupitiya

shooting-targeting-a-woman-in-kollupitiya

shooting-targeting-a-woman-in-kollupitiya

shooting-targeting-a-woman-in-kollupitiya

Post a Comment

Previous Post Next Post