தில்வின் தொடுத்த வழக்கினால் முன்னணியினருக்கு தடை.

frontline-activists-face-censorship-due-to-tilvin-case

கம்பஹா யக்கல வீதியில் அமைந்துள்ள 'அபே நிவஹன' கட்சி அலுவலகத்தின் தற்போதைய நிலையை மாற்றுவதையும், அதன் உரிமையை வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கும் மாற்றுவதையும் தடுக்கும் வகையில், கம்பஹா இலக்கம் 3 மாவட்ட நீதிபதி துலானி வீரவர்தன கடந்த 21ஆம் திகதி தடை மற்றும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.




குறித்த சொத்து முன்னர் ஒரு நீதவான் நீதிமன்ற உத்தரவின் மூலம் முன்னிலை சோசலிசக் கட்சிக்கு அனுபவிப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அக் கட்சியின் உறுப்பினர்கள் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் அங்கு தங்கியிருந்து, கட்சி அலுவலகத்தின் தற்போதைய வடிவத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு தொடர்பாக பிரதிவாதி தரப்பினருக்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டத்தரணிகளான சாமர சபுதந்தி, நிகினி மாப்பிட்டிகம மற்றும் தனுஜ சந்தருவன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி இஷான் அலவத்துரகே இங்கு முறைப்பாட்டாளர் தரப்புக்காக ஆஜரானார்.

Post a Comment

Previous Post Next Post