
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றிக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அவரது மனைவி இன்று (25) லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியைத் தூண்டும் நோக்கில் இந்த லஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.