நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திக்கா லியனகே விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சையை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்,
நடைபெறாத பரீட்சைத் தாள்களுக்கான மீள் பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து பின்னர் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச ஒருங்கிணைப்பு மையப் பொறுப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மண்டப அதிபர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்புக்கு விசேட கவனம் செலுத்தி பொறுப்புடன் செயற்படுமாறு அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
Tags:
Trending