அலவத்துகொட நிலச்சரிவில் 50 குடும்பங்கள் மாயம்!

20-families-missing-in-alawathugoda-landslide

 தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி - மாத்தளை வீதியில் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக்கெல்ல பிரதேசத்தில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.00 மணியளவில் அன்கும்பர – அலவத்துகொட வீதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், கிராமம் கிட்டத்தட்ட முழுமையாக நிலச்சரிவுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர்டன், உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.



குறித்த கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வந்துள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 20 வீடுகள் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சுமார் 50 குடும்பங்கள் காணாமல் போயுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நிலவும் மோசமான வானிலை மற்றும் வீதித் தடங்கல்கள் காரணமாக அனர்த்தம் ஏற்பட்ட இடத்தை அடைவது இதுவரை மீட்புக் குழுக்களுக்குப் பிரச்சினையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் உதவியை உடனடியாக வழங்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அலவத்துகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

gossiplanka image 3



gossiplanka image 1
gossiplanka image 2

Post a Comment

Previous Post Next Post