
தீவு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை 6.00 மணிக்குப் பிறகு அனைத்துப் பாதைகளிலும் ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள மழைப்பொழிவு காரணமாக ரயில் சேவைகளை இயக்குவது பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதால் இந்தத் தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சந்திரசேன பண்டார குறிப்பிடுகையில், தொடர்ச்சியான கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களை அண்மித்த பகுதிகளில் மண்சரிவுகள், வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, ரயில் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.