நிலவும் கடும் மழை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்றும் நாளையும் அத்துடன் நாளை மறுதினமும் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த
- மனைப் பொருளியல் 2
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் 1 மற்றும் 2
- கணக்கீடு 2
- அரபு 2
- சீனம் 2
- இலங்கை வரலாறு 1
- மலாய் 2
- இந்தி 1
- கொரியன் 1
ஆகிய பரீட்சைகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்படும்.
இதற்கிடையில், தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. தற்போது டிசம்பர் 1ஆம் திகதி பரீட்சையை மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டால், முன்னறிவிப்பு வழங்கப்படும்.