வங்கியில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த கேட்டரிங் ஊழியர்: போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது உறுதி!

the-suspicion-of-the-catering-employee-who-repeatedly-deposited-70-million-in-the-bank-being-involved-in-the-powder-business-is-confirmed

 போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7.6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்த சம்பவம் தொடர்பில் கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையொன்றில் பராமரிக்கப்பட்ட கணக்கு மூலம் இந்த பணப் பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளதுடன்,


சந்தேகநபரால் 134 சந்தர்ப்பங்களில் 76,413,972 ரூபா வைப்பிலிடப்பட்டு, மீண்டும் 187 சந்தர்ப்பங்களில் அந்தப் பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தை சம்பாதித்த விதம் குறித்து சந்தேகநபரால் சட்டபூர்வமாக உறுதிப்படுத்த முடியாததாலும், அந்தப் பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளிவந்ததாலும், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி, ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார். அவர் தொடர்பில் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் யார் என்பதைக் கண்டறிய சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post