முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) காலை மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியபடி, இந்த வைத்தியசாலை அனுமதி அவசர நோய்த்தன்மை காரணமாக ஏற்பட்டதல்ல, மாறாக மருத்துவர்களால் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட
சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் எந்தவொரு விசேட பலவீனமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்று (27) மாலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு எந்தவொரு பாரதூரமான நோயும் இல்லை என்றும் குறிப்பிட்டார். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பொதுவான நிலைமைகளைத் தவிர, தனது தந்தைக்கு வேறு எந்த விசேட நோயும் இல்லை என்பதை நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நலமாக இருப்பதாகக் கூறிய நாமல் ராஜபக்ஷ, அவரது ஆசீர்வாதம் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் இங்கு மேலும் தெரிவித்தார்.