
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சியை நேற்று (07) பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மின் தடை காரணமாக இந்த இறைச்சி கெட்டுப்போனது தெரியவந்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ குறிப்பிட்டதாவது, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர், மனித நுகர்வுக்கு தகுதியற்றது என உறுதி செய்யப்பட்ட இறைச்சி கையிருப்பை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட இறைச்சி கையிருப்பின் மாதிரிகள் இன்று (08) அரசாங்க இரசாயன ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அந்த ஆய்வுகளின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags:
News