இன்று (டிசம்பர் 23) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் நிலையான மட்டத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செளலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 306.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 311.50 ஆகவும் மாறாமல் இருந்தது. எவ்வாறாயினும், மக்கள் வங்கி டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 305.99 இலிருந்து ரூ. 306.14 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 312.74 இலிருந்து ரூ. 312.89 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வர்த்தக வங்கியில் (Commercial Bank) அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 304.24 ஆகவும் ரூ. 312.75 ஆகவும் மாறாமல் இருந்தன. இதற்கிடையில், சம்பத் வங்கி டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 306.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 312.75 ஆகவும் எந்த மாற்றமும் இன்றி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.