தற்போது அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணிகளுக்காக 28,500 முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 31,057 பேரை மீட்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்தார்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக செயலிழந்த தொலைத்தொடர்பு அமைப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமாக தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
செயலிழந்த ஃபைபர் இணைப்புகளும் மீட்டெடுக்கப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்தார்.
Tags:
News