சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட மூன்று பீடங்களில், விவசாய பீடமும் கால்நடை மருத்துவ பீடமும் எதிர்வரும் 29ஆம் திகதி திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முகாமைத்துவ பீடம் குறித்து கருத்து தெரிவித்த உபவேந்தர், அதன் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.