இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சிக்கு அதிகாரத்தைப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், எனவே அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று (20) தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பது அவரது நிலைப்பாடாகும்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:
"இந்த நேரத்தில் எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கு சரியான பதில் கிடைக்கும். அவ்வளவுதான் நான் சொல்ல வேண்டியது. இப்போது மிகவும் பொருத்தமான, சிறந்த காரியம் என்னவென்றால், சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கூறுவதுதான். அப்போது உண்மையான மக்கள் கருத்தை கணக்கிட முடியும்."