
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து, மூன்று தாய்லாந்துப் பெண்களை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்த திடீர் சுற்றிவளைப்பை நடத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேகநபர்கள் 34, 36 மற்றும் 38 வயதுடைய தாய்லாந்துப் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tags:
Trending