அனர்த்த நிலை காரணமாக 95 வீதிகளில் மாத்திரமே தொடர்ந்தும் தடங்கல்!

only-95-roads-remain-blocked-due-to-the-disaster-situation

 நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் தற்போது 95 வீதிகளில் மாத்திரமே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமைகள் காரணமாக அந்த அதிகார சபையின் கீழ் உள்ள 256 வீதிகள் சேதமடைந்திருந்தன.



எவ்வாறாயினும், தற்போது நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் வீதி வசதிகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார். எஞ்சியுள்ள வீதிகளில் உள்ள தடங்கல்களையும் அடுத்த சில நாட்களுக்குள் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




வீதிகளில் உள்ள தடங்கல்களை விரைவாக அகற்றுவதற்காக அதிகார சபையின் பொறியியலாளர் குழுக்கள் உட்பட அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கடுகண்ணாவ பிரதேசத்தில் நிலவும் தடங்கல்கள் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - நுவரெலியா பிரதான வீதி இன்று மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த அனர்த்த நிலை காரணமாக வீதி அமைப்புக்கு மேலதிகமாக 20 பாலங்களும் உடைந்து சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post