புகையிரத பருவச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிகள் பயணிக்க வாய்ப்பளிப்பதற்கு அந்தச் சபை தற்போது தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்ததன்படி, 'டிட்வா' சூறாவளியின் தாக்கம் காரணமாக தீவில் தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டே இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புகையிரத பருவச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அதி சொகுசுப் பேருந்துகளில் பயணிக்க இந்த அனுமதி செல்லுபடியாகாது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய அறிவிப்பு கீழே
Tags:
News