அரலகன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்த இரண்டரை வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவ அறிக்கையின்படி, டிசம்பர் 20 ஆம் திகதி காலை கந்தேகம பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் இருந்த நீர் நிரம்பிய குழியில் குழந்தை வீழ்ந்துள்ளது. அரலகன்விலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தை கந்தேகம, தம்மின்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் தற்போது அரலகன்விலை வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரலகன்விலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News