
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக நடத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு மீண்டும் ஓர் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், குறிப்பாக தீவின் அனைத்து அதிபர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம், இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.