அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க தினத்தையாவது அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இலட்சக்கணக்கான மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், அது குறித்து இன்று விவாதிக்க வாய்ப்பு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக வரவு செலவுத் திட்ட விவாதத்தை நடத்த வேண்டியிருப்பது வருந்தத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தியமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
கடந்த நான்கு வருட காலப்பகுதியில் நாடு எதிர்கொண்ட நான்காவது துயரம் இது என்பதை நினைவுபடுத்திய பிரேமதாச, ஈஸ்டர் தாக்குதல், கொரோனா தொற்றுநோய் மற்றும் நாடு திவாலானது போன்ற பாரிய நெருக்கடிகளுக்கு மேலதிகமாக இந்த சூறாவளி நிலையும் நாட்டைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்ற விவாதத்தை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்றும் மேலும் தெரிவித்தார்.
Tags:
Political