இன்று (20) பிற்பகல் காலி நகரில் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
காலி மகா வீதி, காலி-மாத்தறை பிரதான வீதி, காலி-வக்வெல்ல வீதி, காலி-பத்தேகம பிரதான வீதி, சரந்துகடை சந்தி, தலாப்பிட்டிய, தனிப்பொல்கஹ, தங்கெதர மற்றும் பெலிகஹ ஆகிய பிரதேசங்களின் வீதிகள் அத்துடன், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த காலி கோட்டைக்குள்ளும் பல வீதிகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த பிரதேசவாசிகள், வடிகால் அமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், வடிகால்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களாலும் நீர் வெளியேறுவதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.