யூடியூபில் மொஹிதீன் பெக்கின் பாடல்களை வெளியிட்ட MEntertainment நிறுவனத்திற்கு எதிராக மகன் வழக்கு!

son-files-lawsuit-against-mentertainment-for-uploading-mohidin-begs-songs-to-youtube

 காலஞ்சென்ற பிரபல பாடகர் கலாசூரி மொஹிதீன் பெக் அவர்களால் பாடப்பட்ட மிகவும் பிரபலமான 9 பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும், அவற்றின் உரிமையை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றுவதற்கும் தடை விதித்து வர்த்தக உயர் நீதிமன்றம் எம். என்டர்டெயின்மென்ட் (M. Entertainment Pvt Ltd) நிறுவனத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொஹிதீன் பெக் அவர்களின் மகனான மொஹிதீன் இல்லியாஸ் பெக் அவர்களால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவின்படி, 'சகல சத்தம பொது பத்தியென்', 'மினிசாமய் லோவ தெவியன் வன்னே', 'சுவண்டே மட சீதல சுளங்க பவா', 'சம்மா சம்புது வூ', 'மல் சுகந்தே தம் சுகந்தே', 'புதுங்கே அமா தர்மே', 'நின்டா பிரசான்சா', 'சரவன பவ' மற்றும் 'அனேக ஜாதி சன்சாரே' ஆகிய ஒன்பது பாடல்களும் அவ்வாறு வெளியிடுவது தடைசெய்யப்படும்.




முறைப்பாட்டாளர் தரப்புக்காக வாதிட்ட சட்டத்தரணிகள், இந்த பாடல்களின் பதிவு மற்றும் தயாரிப்பு தொடர்பான அறிவுசார் சொத்துரிமை சட்டபூர்வமாக மொஹிதீன் இல்லியாஸ் பெக் அவர்களுக்கு சொந்தமானது என்று சுட்டிக்காட்டினர். பிரதிவாதி நிறுவனம் அந்த உரிமைகளை மீறியுள்ளதாகவும், அந்த அறிவுசார் சொத்துரிமையை தவறாகப் பயன்படுத்தவோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் விற்கவோ அனுமதிக்க முடியாது என்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்புக்காக சட்டத்தரணி திலினி ஹேவவிதாரண அவர்களின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி சந்துன் சேனாதிரத்ன ஆஜரானார். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த மாதம் 31 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post