சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் தலையிடாத விதத்தை விசாரிப்பதற்காக, எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா யோசனை முன்வைத்துள்ளார்.
இங்கு உண்மையான தகவல்களை மறைப்பது எதிர்க்கட்சியின் நோக்கமல்ல, உண்மைகளை வெளிக்கொணர்வதே அதன் நோக்கம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
“தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அழிவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருந்தும் அது தவறிவிட்டது. அரசாங்கம் அதற்கு முறையான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவில்லை. சர்வதேச ஊடகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்தன. ஆனால் அவை கவனத்தில் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படாததால் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழப்புக்கும், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. எனவே, எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நாம் முன்மொழிகிறோம். இங்கு எமது நோக்கம் உண்மையை மறைப்பதல்ல, இந்தத் தவறு எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதே ஆகும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கருத்துக்களை நேற்று (15) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டார்.