இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதியால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய ஜீப் வண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தால் மாதத்திற்கு 1.5 மில்லியன் ரூபாய் பணத்தைச் சேமிக்க முடிந்துள்ளது.
இந்த ஜீப் வண்டிகள் தொகுப்பு, இந்திய இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தின் போது, இரு இராணுவத் தளபதிகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் அடையாளமாக இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இராணுவத்தின் நிர்வாக மற்றும் களப் பணிகளுக்காக இதுவரை தனியார் துறையிலிருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களுக்காக மாதந்தோறும் 1.5 மில்லியன் ரூபாய் (15 லட்சம்) செலவிட வேண்டியிருந்தது. இந்த புதிய ஜீப் வண்டிகளை சேவையில் இணைப்பதன் மூலம், அந்த வாடகை வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆண்டுக்கு 18 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசாங்கப் பணம் சேமிக்கப்படும். (திலங்க குணதிலக்க)