அம்பலாங்கொடை, கல்கொட சுனாமிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த முப்பது வயதுடைய ஒருவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையைச் செய்ய பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் அதேவேளை, துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.