அங்குலான சயுரு புர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள மின் தூக்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம், குடியிருப்பு வளாகத்தின் குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலையை அவரது காதலன் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தகவல்களின்படி, அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அங்குலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.